×

2ம் காலாண்டிற்கான நிதிநிலை அறிக்கை வெளியீடு மெர்க்கன்டைல் வங்கி நிகர மதிப்பு ரூ.7,384 கோடியாக அதிகரிப்பு: மொத்த வணிகம் ரூ.85 ஆயிரம் கோடியை கடந்தது

சென்னை: தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் இயக்குநர் குழு கூட்டம், மதுரையில் நேற்று நடந்தது. இதில், 2023-24ம் ஆண்டுக்கான 2ம் காலாண்டு நிதிநிலை தணிக்கை செய்யப்படாத முடிவுகள் இறுதி செய்யப்பட்டது. வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணன், நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார். பொதுமேலாளர்கள், தலைமை நிதி அதிகாரி மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதில், வங்கியின் நிகர மதிப்பு ரூ.6461 கோடியிலிருந்து ரூ.7384 கோடியாகவும், பங்குகளின் புத்தக மதிப்பு ரூ.408 கோடியிலிருந்து ரூ.466 கோடியாகவும், நிகர லாபம் ரூ.262 கோடியிலிருந்து ரூ.274 கோடியாகவும், சில்லரை, விவசாயம், சிறுகுறு நடுத்தர நிறுவனங்களின் கடன் தொகை 87 சதவீதத்திலிருந்து 91 சதவீதமாகவும், மொத்த வருமானம் ரூ.1141 கோடியிலிருந்து ரூ.1365 கோடியாகவும் உயர்ந்துள்ளது.

எஸ்எம்ஏ கணக்குகள், கடன் தொகையில் 12.42 சதவீதத்திலிருந்து 5.59 சதவீதமாக குறைந்துள்ளது. வங்கி தனது மொத்த வணிகத்தில் 9.07% வளர்ச்சியடைந்து ரூ.85,092 கோடியை எட்டியுள்ளது. வைப்புத்தொகை ரூ.47,314 கோடி மற்றும் கடன் தொகை ரூ.37,778 கோடி என்ற நிலையை அடைந்துள்ளது. முன்னுரிமை துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ.25,079 கோடியிலிருந்து ரூ.28,198 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 12.44% ஆகும். முன்னுரிமை துறைகளுக்கான கடன்கள் ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்கான 40% என்ற இலக்கை விட அதிகமாக 75% என்ற விகிகித்தில் உள்ளது.

விவசாயத் துறைகளுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்கள் ரூ.12,752 கோடியாக உள்ளது. எம்எஸ்எம்இ துறைகளுக்கு வழங்கப்பட்ட மொத்த கடன்கள் ரூ.12,690 கோடியில் இருந்து ரூ.13,132 கோடியாக உயர்ந்துள்ளது. வைப்புத்தொகை ரூ.43,137 கோடியிலிருந்து ரூ.47,314 கோடியாக உயர்ந்துள்ளது. கடன் தொகை ரூ.34,877 கோடியிலிருந்து ரூ.37,778 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர வட்டி வருமானம் ரூ.533 கோடியாக உள்ளது. (முந்தைய ஆண்டின் 2ம் காலாண்டில் ரூ.509 கோடியாக இருந்தது.) இது 4.72% வளர்ச்சியடைந்துள்ளது. ஆர்ஓஏ-1.89% மற்றும் ஆர்ஓஇ-15.01% முறையே (முந்தைய ஆண்டின் 2ம் காலாண்டில் 2.03% மற்றும் 17.65% ஆகவும் மற்றும் நடப்பு நிதியாண்டின் முதலாம் காலாண்டில் 1.85% மற்றும் 14.80% ஆகவும் இருந்தது.) (முந்தைய ஆண்டின் 2ம் காலாண்டில் நிகர மதிப்பு ரூ.6461 கோடியாக இருந்தது.) இது ரூ.923 கோடி உயர்ந்து 14.29% வளர்ச்சியடைந்துள்ளது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post 2ம் காலாண்டிற்கான நிதிநிலை அறிக்கை வெளியீடு மெர்க்கன்டைல் வங்கி நிகர மதிப்பு ரூ.7,384 கோடியாக அதிகரிப்பு: மொத்த வணிகம் ரூ.85 ஆயிரம் கோடியை கடந்தது appeared first on Dinakaran.

Tags : Mercantile Bank ,Chennai ,Tamilnadu Mercantile Bank ,Madurai ,Dinakaran ,
× RELATED பெண் தொகுப்பாளருக்கு பாலியல் தொல்லை...